சர்வதேச நீதி கோரி காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் போராட்டம்
இலங்கையை சர்வதேச நீதிமன்றிற்கு பாரப்படுத்துமாறு கோரி வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் வுனியாவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணியளவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சர்வதேசமே வீதியில் கண்ணீருடன் நாம், எமக்கான நீதியை நாம் பெற ஏதுவாக இலங்கையை சர்வதேச நீதிமன்றிற்கு பாரப்படுத்து போன்ற கோரிக்கையை முன்வைத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எங்கள் உறவுகளுக்கான நீதி சர்வதேச நீதியாகவே வழங்கப்பட வேண்டும், சுமந்திரன் ஸ்ரீதரனை எதிர்க்கின்றோம், வடகிழக்கில் தமிழருக்கு எதிராக நடத்தப்படும் இராணுவ கெடுபிடிகளை உடன் நிறுத்து, இலங்கையில் போர்க் குற்றம் செய்தவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முற்படுத்து, எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்று உண்மையைச் சொல், வெள்ளை வானில் கடத்தி செல்லப்பட்டவர்கள் எங்கே, சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளை எந்தவித நிபந்தனையும் இன்றி விடுதலை செய் போன்ற பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை கைகளில் ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பினர்.
கருத்துக்களேதுமில்லை