கட்டாரில் சிக்கித் தவித்த மேலும் 272 பேர் நாடு திரும்பினர்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கட்டார் நாட்டில் சிக்கித் தவித்த 272 பேர் நாடு திரும்பியுள்ளனர்.
அவர்கள் அனைவரும் விசேட விமானத்தின் மூலம் இலங்கைக்கு இன்று (புதன்கிழமை) காலை அழைத்துவரப்பட்டுள்ளனர்.
நாடு திரும்பிய அவர்களுக்கு விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து, பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் உள்ள ஹோட்டல்களில் அவர்களைத் தங்க வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸின் தாக்கம் குறையாதுள்ள நிலையில், வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை