வடக்கில் சஜித்தின் பிரசாரக் கூட்டம் – ஊடகவியலாளர்களிடம் கடும் சோதனை
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வவுனியாவில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில், செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களிடம் கடும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வடக்கில் தனது தேர்தல் பிரசாரத்தை இன்று ஆரம்பிக்கிறார். அதற்கமைய முதல் பிரசாரக்கூட்டம் வவுனியாவில் இன்று காலை இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், ஊடகவியலாளர்களின் செய்தி சேகரிப்புக்கான அனைத்து பொருட்களும் விசேட அதிரடிப்படையினரால் கடும் சோதனைக்குட்படுத்தப்பட்டிருந்
இதேவேளை வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ள நிலையில் பிரசார கூட்டத்திற்கு வருபவர்கள் மண்டப வளாகத்திற்குள் மோட்டார் சைக்கிள் உட்பட்ட வாகனங்களை கொண்டுசெல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் சில மீற்றர் தூரத்திலேயே வாகனங்களை நிறுத்தி நடந்துவருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை