அரச மற்றும் தனியார் ஊழியர்களின் வேலை நேரத்தில் மாற்றம்!
அரச மற்றும் தனியார் ஊழியர்களின் வேலை நேரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன் அடிப்படையில், அரச நிறுவனங்களின் வேலை நேரத்தை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.45 மணி வரையும், தனியார் பிரிவின் வேலை நேரத்தை காலை 9.45 முதல் பிற்பகல் 6.45 மணி வரையும் மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று நிலைமையினை தடுப்பதற்காக சமூக இடைவௌியை பேணுவதற்காகவும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும் மற்றும் அரச மற்றும் தனியார் சேவைகளின் செயல்திறனை அதிகரிக்கும் நோக்கத்துடன் இந்த நேரங்கள் திருத்தத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் அதனுடன் தொடர்புடைய பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையொன்றை தயாரிக்க மேலதிக செயலாளர் திலகரத்ன பண்டா தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டது.
அந்த குழுவினால் தனியார் மற்றும் அரச நிறுவனங்களின் வேலை நேரங்கள் தொடர்பில் தற்போது காணப்படும் நேரத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக தயாரிக்கப்பட்ட அறிக்கை இன்று போக்குவரத்து அமைச்சின் செயலாளர் காமினி செனவிரத்னவால் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் ஒப்படைக்கப்பட்டது.
குறித்த பரிந்துரைகள் அரசாங்க நிர்வாக அமைச்சிடம் மற்றும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் குறித்த பரிந்துரைகளை செயற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை