க.பொ.த உயர்தரப் பரீட்சைக் குறித்து கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நடத்துவது குறித்து 200 குழுக்கள் மூலம் மாணவர்கள் மத்தியில் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய எதிர்வரும் 6 ஆம் திகதி  பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இந்த ஆய்வுகள் நடத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இதற்காக 200 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், நேரடியாக மாணவர்களிடம் சென்று அவர்களிடம் இது குறித்து வினவி ஆராய்ந்தே இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி பரீட்சை நடைபெறும் என எந்தவொரு மாணவரும் குழப்பமடையத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலை கட்டமைப்பில் உள்ள மாணவர்களும் இரண்டாவது மற்றும் மூன்றாவது தடவை பரீட்சைக்கு தோற்றவிருக்கும் பரீட்சார்த்திகள் குறித்த பரீட்சையை நடத்தும் திகதியில் மாற்றம் ஏற்படுத்துமாறு கோரிக்கையை முன்வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.