பரிஸ்-பொண்டி நகரசபை தேர்தல்: ஈழத்தமிழ் பெண் சபை உறுப்பினராக தெரிவு
பரிஸ்- பொண்டி நகரில் நடைபெற்ற நகரசபைக்கான தேர்தலில் வலதுசாரி La Republicanவேட்பாளரான Stephen Herve மேயராக வெற்றியடைந்துள்ளார்.
மேலும் பொண்டி தமிழ் மக்கள் சார்பாக அவரது கட்சிப் பட்டியலில் இணைந்து போட்டியிட்டவர்களில் ஒருவரான பிரேமி பிரபாகரன் என்ற ஈழத்தமிழ் பெண், சபையின் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்த தமிழர்கள், அதிகமாக வாழும், Seine-Saint-Denisபிராந்திய பொண்டி உட்பட பல நகர சபைகளில், உறுப்பினர் பதவிகளுக்கு ஈழத்தினை பின்னணியாக கொண்ட பலர் போட்டியிட்டிருந்தனர். ஆனால், அதில் பெரும்பாலானோர் வெற்றியடையவில்லை.
கருத்துக்களேதுமில்லை