குழந்தை பராமரிப்பு நிலையங்கள் நாளை முதல் மீள திறப்பு
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் மூடப்பட்டிருந்த குழந்தை பராமரிப்பு நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய குழந்தை பராமரிப்பு நிலையங்கள் நாளை (வியாழக்கிழமை) முதல் மீள திறக்கப்படவுள்ளன.
குழந்தைகள் பராமரிப்பு நிலையங்கள் எதிர்வரும் ஆறாம் திகதி முதல் மீள திறக்கப்படவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சுகாதார அமைச்சரிடம் தொடர்ந்தும் பெற்றோர்கள் முன்வைத்த கோரிக்கை அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை