இலங்கை சிங்கள- பௌத்த நாடு அல்ல: மங்கள
சிங்கள பௌத்த நாடு என்று நாட்டை ஒருபோதும் அடையாளப்படுத்த முடியாதென முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நேர்காணல் நிகழ்ச்சியில் மங்கள சமரவீர மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையானது சிங்கள பௌத்த நாடு அல்லவென நான் கூறிய கருத்து பலருக்கு பெரும் பிரச்சினையாக அமைந்தது.
ஆனால் உண்மையாக நாட்டை ஆகமத்தின் அடிப்படையில் அடையாளப்படுத்த முடியாது.
இது இலங்கை நாடு. நான் சொல்லும் விடயங்களை மூளை உள்ளவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
அதாவது பௌத்த மதம் நான் கூறிய கருத்துக்களினால்தான் கேளிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதா என்பதனை நன்கு யோசித்து பாருங்கள்.
மேலும் பௌத்த மதம் தொடர்பாக நான் சொல்வதனை விட மஹாநாயக்கர்களே இவ்விடயம் குறித்து மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.
இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி ஆகியன சிறந்த முறையில் செயற்பாடுகளை முன்னெடுக்க தவறியுள்ளன.
மேலும் நான் தற்போது இல்லை. ஆகவே சிறந்த முறையில் அவர்கள் செயற்பாடுகளை முன்னெடுக்கட்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்
கருத்துக்களேதுமில்லை