கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1748 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து 37 பேர் இன்று (புதன்கிழமை) வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இதேநேரம் இவர்களில் 6 கடற்படை வீரர்களும் உள்ளடங்குவதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இதுவரை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 842 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

இதேநேரம் இலங்கையில் இதுவரை 2047 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

அவர்களில் 1711 பேர் குணமடைந்துள்ள நிலையில், ஏனையவர்களில் 288 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.