எம்.சி.சி. குறித்து அமெரிக்க தூதரகம் அளித்த அறிக்கைகள் பொய்யானவை – கெஹெலிய
மிலேனியம் சவால்கள் ஒப்பந்தம் தொடர்பாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அளித்த அறிக்கைகள் அனைத்தும் உண்மை இல்லை என முன்னாள் இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
மதநிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஒரு நாட்டின் தூதுவர் அளித்த அறிக்கைகள் எப்போதும் உண்மையாக இருப்பதில்லை, யுத்தத்தின்போது இவ்வாறான பல அறிக்கைகள் வெளியாகியிருந்தன எனக் கூறினார்.
இது தொடர்பாக மதிப்பாய்வு செய்த ஆணைக்குழுவினால் ஒரு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்நிலையில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தவறானதா இல்லையா என்பதை அறிக்கையின் உள்ளடக்கத்தைப் படித்து அறிந்துகொள்ள முடியும் என்றார்.
மேலும் இதுபோன்ற விடயங்களைப் தொடர்பாக கவலைப்படத் தேவையில்லை என்றும், இதுபோன்ற நடவடிக்கைகள் இரகசியமாக எசெய்யப்பட்டிருந்தால் அவை இறுதியில் வெளிப்படும் என்றும் கெஹெலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை