கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்த அறிவிப்பு வெளியானது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

2020ம் ஆண்டு பொதுத் தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சிகளும் சுயாதீனக்குழுக்களும் தங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

அதற்கமைய தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பான செயற்பாடுகள் இடம்பெற்று வரும் நிலையில், இந்த வாரம் அல்லது அடுத்த வாரத்திற்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞானம் வெளியிடப்படலாம் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இந்த வார இறுதிக்குள் வெளியிடப்படவுள்ளதாக, அதன் வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.