வீட்டிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு
- வவுனியா நிருபர் –
வவுனியா வேப்பங்குளம் 6ம் ஒழுங்கைக்கு அண்மித்த பகுதியிலிலுள்ள வீடோன்றிலிருந்து இன்று (02.07.2020) காலை இளைஞரின் சடலமொன்றினை வவுனியா பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.
வீட்டின் இரவு நித்திரைக்கு சென்ற இளைஞனை காலை தயார் எழுப்பிய சமயத்தில் இளைஞன் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து தயார் அயலவர்களுக்கு தகவலை வழங்கியதினையடுத்து அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் இளைஞரின் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
27வயதுடைய ராஜேந்திரன் விமலராஜ் என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை