வடக்கு வீதி இணைப்புத் திட்டத்தின் கடன் தொகைக்கான காலம் நீடிப்பு!
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட வடக்கு வீதி இணைப்புத் திட்ட நிர்மாணப் பணிகளுக்கான கடன் தொகை செல்லுபடியான காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இக் கடன் தொகைக்கான காலம் 2020 ஜுன் மாதம் 30 ஆம் திகதியாக இருந்த நிலையில் 2020 டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையில் நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியுதவி வழங்கப்படும் வடக்கு வீதி இணைப்புத் திட்டத்தின் கீழ் தேசிய பெருந்தெருக்கள் மற்றும் மாகாண வீதி புனரமைப்பு மற்றும் வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் தெரிவு செய்யப்பட்ட பாலங்கள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 98 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை