எம்.சி.சி. உடன்படிக்கை குறித்து அமைச்சர்களின் கருத்துக்களை கோரும் ஜனாதிபதி
அமெரிக்கா நிறுவனத்துடனான எம்.சி.சி உடன்படிக்கை குறித்து அமைச்சர்கள் அனைவரையும் தங்கள் தனிப்பட்ட கருத்தினை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளாரென அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை கூட்டத்தில் எம்.சி.சி விடயம் குறித்து ஆராயப்பட்டதாக தெரிவித்த அவர், எம்.சி.சி உடன்படிக்கை குறித்து மீளாய்வு குழு சமர்ப்பித்துள்ள இறுதி அறிக்கையை அமைச்சர்கள் படித்துப்பார்க்கவேண்டும் என ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளாரென குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர் அமைச்சர்கள் ஒவ்வொருவரையும் தங்கள் கருத்தினை சமர்ப்பிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில், இலங்கைக்கு பாதகம் விளைவிக்கும் எந்தவொரு உடன்படிக்கையிலும் அரசாங்கம் எந்த நாட்டுடனும் கைச்சாத்திடாது என பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
எனினும் இரண்டு நாடுகளிற்கு இடையிலான விவகாரம் என்பதால் எதிர்க்கட்சிகள் வேண்டுகோள் விடுக்கின்றனபடி எந்த ஒப்பந்தத்தையும் கிழித்தெறிய முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை