உரிமை துறந்த அபிவிருத்தி எனது இலக்கல்ல அபிவிருத்திக்கான உரிமையே எனது இலக்கு – உதயகுமார்

உரிமை துறந்த அபிவிருத்தி எனது இலக்கல்ல அபிவிருத்திக்கான உரிமையே எனது இலக்கு இன்று பல்வேறு குழுக்கள் அபிவிருத்தியை செய்வாக கூறுகிறார்கள் இவர்கள் இருந்த காலத்திலே என்ன அபிவிருத்தியை செய்தார்கள் என்பதை மக்கள் அறிவார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு வேட்பாளரும் ஓய்வு பெற்ற அரசாங்க அதிபருமாகிய மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாவட்ட வேட்பாளரான மாணிக்கம் உதயகுமாரின் அலுவலக திறப்பு விழா நேற்றைய தினம்  (புதன்கிழமை)  திருமலை வீதியில் திறந்துவைதத்த பின் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு  தெரிவித்தார்

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ‘உரிமை துறந்த அபிவிருத்தி எனது இலக்கல்ல அபிவிருத்திக்கான உரிமையே எனது இலக்கு’ இன்று பல்வேறு குழுக்கள் அபிவிருத்தியை செய்வாக கூறுகிறார்கள் இவர்கள் இருந்த காலத்திலே என்ன அபிவிருத்தியை செய்தார்கள் என்பதை மக்கள் அறிவார்கள் ஆகவே இந்த அபிவிருத்தி என்ற மாயையிலிருந்து மக்களை மக்களுடைய தன்மானத்தை காக்க கூடிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிண்னணியிலே இருந்து கொண்டு அவர்களுடைய அபிவிருத்தியை சமாந்தரமாக கொண்டு செல்வதற்கு தான் நான் முணைகின்றேன்.

அரசியலிலே நான் வந்திருப்பது இந்த மாவட்டத்திலே இருக்கின்ற  60 வீதத்திற்கும் குறைவாக வறுமைக் கோட்டின் கீழ் வாழுகின்ற மக்கள் சார்பாக அரசியல் செய்வதற்காக அதே போல இந்த பிரதேசத்திலே வாழ்கின்ற 40000 ற்கும் மேற்பட்ட பெண்கள் தலைமை தாங்குகின்ற குடும்பங்களுடைய தேவைகளை உணர்ந்து அவர்களுக்கு அரசியல் செய்வதற்காக அதே போல 7000 ற்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளின் தேவையை நிறைவேற்றக் கூடிய அரசியல்வாதியாக செயற்பட இருக்கின்றேன்.

அதே போல 4000 ற்கு மேற்பட்ட முன்னால் போராளிகள் புணர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னால் போராளிகள் பல்வேறு வடுக்களையும் வலிகளையும் சுமந்தவர்களாக இருக்கின்றார்கள். அவர்களுடைய வடுக்களை நாங்கள் ஆற்றமுடியாது போனாலும் வலிகளை குறைப்பதந்கான வழிகளை நாங்கள் செய்ய விளைகின்றோம் அந்த அடிப்படையிலே  இவ்வாறான மக்களுடைய தேவைகளை உணர்ந்து அவற்றை செயற்படுத்துவதற்காக மக்கள் ஆலோசனை குழு ஒன்றினை அமைக்க இருக்கின்றேன்

மக்கள் அறிவார்கள் மக்களுடன் நான் இருக்கின்றேன் மக்கள் என்னை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் தேவைகளை அறிந்து செயற்படுவேன்” என அவர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.