கொழும்பு துறைமுக ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்!
கொழும்பு துறைமுக ஊழியர்கள் தமது பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக துறைமுக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்குவது தொடர்பான தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் இவ்வாறு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை