விவசாயத்தை வளர்ப்பதற்கான தேவைகளை சரியாக அடையாளம் காண வேண்டும் – ஜனாதிபதி
தேவைகளை சரியாக அடையாளம் கண்டு விவசாயத்தை வளர்ப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தி உள்ளார்.
பிராந்திய அபிவிருத்தி வங்கிகளின் தற்போதைய நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தக் கலந்துரையாடலின் போதே இவ்வாறு ஜனாதிபதி வலியுறுத்தியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டில் வெளிநாட்டு தொழிற்சாலைகளை ஆரம்பிக்காமல் ஏற்றுமதி விவசாயத்தை அபிவிருத்தி செய்வதற்கான நேரம் இதுவென ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாட்டில் தொழிற்சாலைகளை உருவாக்குவதால் மாத்திரம் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட கிராமப்புற தொழில்முனைவோரை மேம்படுத்தாது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், தேவைகளை சரியாக அடையாளம் கண்டு விவசாயத்தை வளர்ப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை வளர்ப்பதே அரசாங்கத்தின் நோக்கமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அரச வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடனில் இருந்து பிராந்திய அபிவிருத்தி வங்கிகளை மீட்பதற்கான ஒரு பொறிமுறையை வகுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை