பணிப்புறக்கணிப்பை முழுவதுமாக கைவிட துறைமுக தொழிங்சங்கம் இணக்கம்
பணிப்புறக்கணிப்பை முழுவதுமாக கைவிட துறைமுக தொழிங்சங்கம் இணங்கியுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இடையில் இன்று (வெள்ளிக்கிழமை) தங்காலையில் அமைந்துள்ள கால்டன் இல்லத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலைத் தொடர்ந்தே, பணிப்புறக்கணிப்பை முழுவதுமாக கைவிடவுள்ளதாக துறைமுக தொழிங்சங்கம் அறிவித்துள்ளது.
இற்த கலந்துரையாடலின்போது, சீனாவில் இருந்து இறக்குமதி செய்த பழுதூக்கிகளை கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் பொருத்த பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, தமது பணிபுறக்கணிப்பு போராட்டத்தை முழுவதுமாக கைவிட துறைமுக தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை