வீரர்கள் தரப்பில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெறவில்லை- விசாரணைப் பிரிவு அறிவிப்பு
2011ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் வீரர்கள் தரப்பில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெறவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக எந்தவொரு கிரிக்கெட் வீரர்களும் விசாரணைக்கு ஆஜராகி வாக்குமூலம் அளிக்கத் தேவையில்லை என இதுகுறித்து ஆராயும் விசேட விசாரணைப் பிரிவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த ஆட்டநிர்ணய சதி தொடர்பாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, முன்னாள் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க, இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் முன்னாள் தலைவர் அரவிந்த டி சில்வா ஆகியோர் விளையாட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பிலான பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை