மன்னார் தேர்தல் தொகுதியில் வாக்கு எண்ணும் நிலையம் இடமாற்றம்!

எதிர்வரும் ஓகஸ்ட் ஐந்தாம் திகதி நடைபெற இருக்கும் இலங்கையின் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மன்னார் தேர்தல் தொகுதிக்கான பிரதான வாக்கு எண்ணும் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என மன்னார் மாவட்ட உதவித்தேர்தல் அதிகாரி ஜெ.ஜெனிற்றன் தெரிவித்துள்ளார்

வழமையாக மன்னார் மாவட்டச் செயலகத்தில் பத்து வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்படடும். ஆனால் இந்த முறை அவை பதினைந்தாக  அதிகரிக்கப்பட்டு மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரிக்கு  வாக்கெண்ணும் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் மன்னார் தேர்தல் தினைக்களத்தில் நடைபெற்ற மாதிரி வாக்கு எண்ணல் அடிப்படையில் மன்னார் மாவட்டச் செயலகத்தில்  காணப்படும் இடப்பற்றாக்குறை காரணமாகவும் சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிப்பதற்காகவும் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

இதன் அடிப்படையில் மன்னார் தேர்தல் தொகுதியின் பிரதான வாக்கு எண்ணல் நிலையமாக மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி தேர்வு செய்யப்பட்டுள்ளதுடன் அங்கிருந்தே பெறுபேறுகள் உற்பட 2020ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்தல் இறுதி நடவடிக்கைகள் இடம் பெறும் என்று மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஜெ.ஜெனிற்றன் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.