கொரோனா வைரஸ்: மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு
நாட்டில், நேற்று மட்டும் மேலும் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2,069 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நபர்களில் இருவர் மடகஸ்காரில் இருந்தும் மற்றுமொருவர் மாலைத்தீவில் இருந்து நாடு திரும்பிய நிலையில், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தபட்டவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை1,863 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று நோயாளிகளில் 195 பேர் தொடர்ந்தும் நாடு முழுவதும் உள்ள 10 வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதேவேளை, 57 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளன நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை