சரித்திரம் படைக்கும் கூட்டமைப்பு – இரா. சம்பந்தன்
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக ஆசனங்களை பெற்று சரித்திரம் படைக்கும் என அதன் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இந்த நம்பிக்கை தனக்கு உள்ளது என குறிப்பிட்ட அவர் அனைவரும் தவறாது வாக்களிப்பில் கலந்துகொண்டு வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் பேசிய அவர், வடக்கு கிழக்கு மக்களின் ஏகோபித்த குரலாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு விளங்குகின்றது.
நாடாளுமன்றத்திலும் சர்வதேசத்திலும் தமிழ் மக்களின் உரிமைக்கான எமது குரல் தொடர்ந்தும் ஒலித்துக்கொண்டிருக்கும் எனவே இம்முறை எமது குரல்களுக்கு மக்கள் பேலும் வலுவடையச் செய்ய வேண்டும் என்றும் இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டார்.
கடந்த காலங்களை விட அதிக எண்ணிக்கையிலான பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
அத்தோடு தமிழரின் தாயாக பூமியின் வரலாற்றினை மாற்றியமைக்கும் மறைமுக திட்டங்களை தென்னிலங்கை வகுத்து வருவதாக குற்றம் சாட்டிய இரா.சம்பந்தன், இதனை தடுத்து நிறுத்த அனைவரும் ஓரணியில் நிற்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
கருத்துக்களேதுமில்லை