மக்களின் பிரச்சினை பட்டினியே தவிர நாட்டின் பிளவு அல்ல- ரணில்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பிரச்சினை பட்டினியே தவிர நாட்டின் பிளவு அல்லவென ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பொதுக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பொதுக்கூட்டத்தில் ரணில் மேலும் கூறியுள்ளதாவது,  “நாடு முழுவதிலும் உள்ள மக்களில் அதிகமானோர் பட்டினியில் வாடுகின்றனர்.

அனைத்து வணிகங்களும் சரிவடைந்து காணப்படுகின்றது. அதாவது, முச்சக்கர வண்டி வியாபாரத்திலிருந்து பெருவணிகம் வரை அனைவரும் வருமானம் இழந்துள்ளனர்.

மேலும் இந்த அரசு, ஆட்சிக்கு வந்து எட்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் வேலை இழப்பைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.