தனித்து நின்றால் எமது உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியாது- கணேசபிள்ளை
நாங்கள் ஒன்றாக இணைந்தே எமது உரிமைகளைப் பற்றிப் பேசவேண்டும். தனித்தனியே நின்று கேட்பதனால் எந்த பலுனும் கிடைக்காதென பொதுஜன பெரமுனவின் யாழ்.மாவட்ட வேட்பாளர் கணேசபிள்ளை தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் கணேசபிள்ளை மேலும் கூறியுள்ளதாவது, “நாங்கள் பாடசாலை காலம் முதலே பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.
ஆனால், இன்று வரை எங்களது எந்ததொரு போராட்டத்துக்கும் தீர்வுகள் முன்வைக்கப்படவில்லை. நாங்கள் வறுமையுடனே தொடர்ந்து வாழ்ந்து வருகின்றோம்.
தேர்தல் காலங்களில் மாத்திரம் எம்மிடம் வந்து வாக்குகளை பெற்று செல்பவர்கள், எங்களுக்காக எதனையும் செய்யாமல், அவர்கள் மாத்திரம் சுகபோகங்களை அனுபவித்து சந்தோசமாக வாழ்கின்றனர்.
இவர்கள் மீண்டுமொரு தேர்தல் நடைபெறுகின்றப்போதே உரிமைகள் பற்றி பேசுகின்றனர். இவ்வாறு உரிமைகளை ஒருபோதும் பெற்றுக்கொள்ள முடியாது.
நாங்கள் தனித்தனியே நின்று கேட்காமல் ஒன்றாக இணைந்து எமது உரிமைகளுக்காக குரல் கொடுத்தால் நிச்சயம் கிடைக்கும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை