ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் கட்டாரில் இருந்து 17 பேர் நாடுதிரும்பினர்
பயணக் கட்டுப்பாடு காரணமாக ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் கட்டார் நாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 17 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
இன்று டுபாயில் இருந்து ஏழு பேரும் 10 பேர் கட்டாரில் இருந்தும் நாடு திரும்பியதாகவும் விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு வந்த அனைவருமே பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கண்டறிவதற்கான பி.சி.ஆர். சோதனை நடத்தப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை