சுதந்திரக்கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக மைத்திரி அறிவிப்பு
நாட்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலினை தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் இடம்பெற்ற பொதுக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கூட்டத்தில் மைத்திரிபால சிறிசேன மேலும் கூறியுள்ளதாவது, “ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முழுமையாக சிதைவடைந்து விட்டதாக சில அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன.
ஆனால், அதில் எந்ததொரு உண்மையில் இல்லை. சுதந்திரக்கட்சி முன்னோக்கிதான் நகர்ந்து கொண்டு இருக்கின்றது.
அதாவது, பின்னடைவுகளுக்கு மத்தியில்தான் சுதந்திரக்கட்சியின் எதிர்காலம் உள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை