கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 883 ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே 879 பேர் குணமடைந்திருந்த நிலையில், மேலும் 04 பேர் குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2,074ஆக பதிவாகியுள்ளது.
அவர்களில் 1,885 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
மேலும் கொரோனா தொற்று நோயாளர்களில் 178 பேர் தொடர்ந்தும் நாடு முழுவதும் உள்ள 11 வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதேவேளை, 46 பேர் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதுடன், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை