இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் கைது
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறை- ஹெரென்துடுவ பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குசல் மென்டிஸின் மோட்டார் வாகனம் மோதியதிலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை