பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் குறித்து அறிக்கை கோரும் ஜனாதிபதி
பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் குறித்து முழுமையான அறிக்கையொன்றை தனக்கு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
பொலன்னறுவை அத்தனகடவல பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இதன்போது, பொலன்னறுவை மாவட்ட பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் மற்றும் ஏனைய குறைபாடுகள் குறித்து மக்கள், ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
அது தொடர்பாக கவனம் செலுத்திய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் குறித்து முழுமையான அறிக்கையொன்றை தனக்கு வழங்குமாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிடம் தெரிவித்தார்.
மேலும் சிறியளவில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டுள்ள எலஹெர மக்களுக்கு சுற்றாடலுக்கு பாதிப்பில்லாத வகையில் தமது தொழிலை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் அமரகீர்த்தி அத்துகோரலவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மக்கள் சந்திப்பில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை