நிதி நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பான அறிக்கை தயார்!

நிதி மற்றும் குத்தகை  நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் ஆராயும் குழுவின் இறுதி அறிக்கை நாளைய தினம் மத்திய வங்கி ஆளுநரிடம் கையளிக்கப்படவுள்ளது.

முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்கான காலஎல்லை நிறைவடைந்த பின்னரும் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில்  இறுதி அறிக்கையினை  தயாரிப்பதில்  தாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சுமார் 250 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக விசாரணைகளை முன்னெடுத்துவரும்  மூவரடங்கிய குழு தெரிவித்துள்ளது.

தனிநபர் முறைப்பாடுகள் அதிகளவில் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் கடந்த 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

நிதி மற்றும் குத்தகை நிறுவனங்களின் மோசடிகள் குறித்து ஆராய்ந்து  அறிக்கை சமர்ப்பிப்பதற்காக மத்திய வங்கி ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டீ லக்ஸ்மன  மூவர் அடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0Shares

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.