மருதனார்மடத்தில் வெடிகுண்டு ஒன்று வெடிக்காத நிலையில் கண்டுபிடிப்பு!
மருதனார்மடம் – கைதடி வீதியில் பழைய வெடிகுண்டு ஒன்று வெடிக்காத நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
வலிகாமம் வலயக் கல்வி அலுவலகத்திற்கு அண்மையில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை இந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அதனை மீட்டு செயலிழக்க வைப்பதற்கான அனுமதி மல்லாகம் நீதிமன்றில் இன்று பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் பின்னர் வெடிகுண்டு குறித்த பகுதியிலிருந்து அகற்றப்படவுள்ளதாகவும் சுன்னாகம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை