குருமன்காட்டில் இராணுவச் சோதனை சாவடி: அசௌகரியத்தில் மக்கள்

வவுனியா, குருமன்காடு சந்திக்கு அருகில் புதிதாக இராணுவச் சோதனைச் சாவடியொன்று இன்று (திங்கட்கிழமை) அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் அவ்வீதி வழியாக பயணிக்கும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களிற்கு முகம்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்கள் அதிகளவு நடமாடும் குருமன்காடு பகுதியிலேயே இந்த இராணுவச் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த வீதியில் பயணிக்கும் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.