சவுதி அரேபியாவில் சிக்கியிருந்த 275 பேர் நாடு திரும்பினர்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சவுதி அரேபியாவில் சிக்கியிருந்த 275 பேர் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
அவர்கள் விசேட விமானத்தின் மூலம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
விமான நிலையத்தை வந்தடைந்த அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனையடுத்து, பரிசோதனைகள் முடிவுகள் வரும் வரையில் அவர்களை விமான நிலையத்தை அண்மித்த பகுதிகளில் உள்ள ஹோட்டல்களில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை