கொரோனா அச்சம் – வெலிக்கட சிறைச்சாலை வளாகத்துக்குள் செல்ல அனுமதி மறுப்பு

வெலிக்கட சிறைச்சாலையில் மீள் அறிவித்தல் வரும் வரையில் சிறை கைதிகளை பார்வையிட செல்வோருக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெலிக்கட சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்தமை இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த கைதி போதைப் பொருள் புனர்வாழ்வு மத்திய நிலையமான கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து கடந்த 27 ஆம் திகதி வெலிக்கட சிறைச்சாலைக்கு அழைத்துவரப்பட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, குறித்த கைதியுடன் தொடர்பில் இருந்தவர்கள், கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.