ஹோட்டல் உரிமையாளர் சடலமாக மீட்பு; மனைவி வைத்தியசாலையில் அனுமதி
கெஸ்பேவ, குருகம்மான வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளரான 50 வயதுடைய ஒருவர் கட்டிலில் தூங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கெஸ்பேவ, குருகம்மான வீதியிலுள்ள ஹோட்டலின் உரிமையாளரான குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4.00 மணியளவில் பிலியந்தலை பொலிஸ் நிலையத்திற்க்கு தகவல் கிடைத்தது.
இதனை அடுத்தது கெஸ்பேவ, குருகம்மான வீதியில் உள்ள குறித்த ஹோட்டலுக்கு சென்ற பொலிஸார் குறித்த வர்த்தகர், தலையின் பின்புறத்தில் காயத்துடன் கட்டிலில் இருந்து சடலமாக மீட்டுள்ளனர்.
இதேவேளை அவரது மனைவி காயமடைந்த நிலையில், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் பிலியந்தலை பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதோடு, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
மேலும் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை