ரஷ்ய பெண்ணுக்கு இடையூறு விளைவித்த ஐந்து பேருக்கும் விளக்கமறியல்!
கொழும்பு காலி முகத்திடலில் ரஷ்ய பெண்ணொருவருக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களை எதிர்வரும் 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் இலங்கையரான தனது காதலன் மற்றும் நண்பருடன் காலி முகத்திடலில் இருந்தபோது, அங்குவந்த 10 பேர் கொண்ட அடையாளம் தெரியாத குழுவொன்று அவர்களுக்கு இடையூறு விளைவித்திருந்த நிலையில் அதனை அப் பெண் காணொளியாக பதிவு செய்து முகப்புத்தகத்தில் பதிவேற்றியிருந்தார்.
இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டதை அடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட ஐந்து பேர் நேற்று கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஐவரும் இன்று (செவ்வாய்க்கிழமை) கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
அத்தோடு குறித்த ஐந்து பேரையும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை