சஜித்தை பிரதமராக்க தமிழ் மக்கள் சந்தர்ப்பமளிக்க வேண்டும் – விக்டர் ஸ்டேன்லி
தமிழ் மக்கள் இனிமேலும் ஏமாறக்கூடாது என்றும் ஏமாற்றப்பட கூடாதென்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட வேட்பாளர் விக்டர் ஸ்டேன்லி தெரிவித்துள்ளார்.
எனவே இம்முறை பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று பிரதமராகக்கூடிய சந்தர்ப்பத்தினை தமிழ் மக்கள் சஜித் பிரேமதாசவிற்கு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
சஜித் பிரேமதாச ஒரு இனவாதியோ அல்லது மதவாதியோ அல்ல என தெரிவித்த விக்டர் ஸ்டேன்லி, சிறுபான்மை அல்லது பெரும்பான்மை என்ற பேச்சுக்கு இடம்கொடுக்காதவர் என்றும் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை