சிவாஜிலிங்கத்தை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய மல்லாகம் நீதிமன்றில் இன்று (புதன்கிழமை) நண்பகல் 12 மணிக்கு அவரை முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மானிப்பாய் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணைகளுக்காகவே அவர் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அந்த வழக்கில், எதிர்வரும் 9ஆம் திகதி நாளை மானிப்பாய் நவாலி தேவாலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளதாகவும் அந்த ஆர்ப்பாட்டத்தின் ஊடாக பொதுமக்களின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு, தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான விடுதலைப்புலிகள் அமைப்பை மீள் உருவாக்கம் செய்வதற்கு முற்படுவதாகவும் பொலிஸார் அறிக்கையிட்டுள்ளனர்.
இதன் காரணமாக குறித்த ஆர்ப்பாட்டத்தை தடை செய்யுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளதாக நீதிமன்றினால் அனுப்பப்பட்டுள்ள அழைப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை