கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்கும் செயலணி – வர்த்தமானி வெளியீடு

கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, ஜனாதிபதி செயலாளர் பி.பி.ஜயசுந்தரவினால் நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த செயலணியின் உறுப்பினர்களாக எல்லாவல மேதானந்த நாயக்க தேரர், பனாமுரே திலகவங்ச நாயக்க தேரர், பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி செனரத் பண்டார திசாநாயக்க, காணி பணிப்பாளர் நாயகம் சந்திரா ஹேரத் உள்ளிட்ட 11 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை முறையாக மதிப்பீடுசெய்து பாதுகாப்பதற்கு பாதுகாப்பு செயலாளரின் தலைமையில் ஜனாதிபதியால் கடந்த மே மாதம் 22ம் திகதி இச்செயலணி உருவாக்கப்பட்டது.

இதுகுறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த ஜூன் மாதம் இரண்டாம் திகதி வெளியிடப்பட்டது.

11 பேர் அடங்கிய குறித்த செயலணியில் சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் எவரும் இடம்பெற்றிருக்கவில்லை என விமர்சனங்கள் எழுப்பப்பட்ட நிலையில், நேற்று வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலிலும் சிறுபான்மை பிரதிநிதிகள் எவரும் இடம்பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.