எம் இனத்தின் இருப்பு கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது – சிறீதரன்
எம் இனத்தின் இருப்பு கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “எம் இனத்தின் வாழ்க்கை என்பது அழிக்கப்பட்டுக்கொண்டு செல்கிறது. எங்களை நோக்கி புத்த கோவில்கள் வருகிறன.
எங்கள் இடங்கள் இராணுவ முகாம்களாக மாற்றப்படுகின்றன. காலையில் இருந்து மாலை வரை எத்தனையோ காவலரண்களை பார்கின்றோம்.
நாளாந்தம் புதிய புதிய காவலரண்கள் வருகிறன. இந்த சூழ்நிலைகள் எல்லாம் எங்களைப் பொறுத்த வரை ஒரு ஆபத்தான சூழ்நிலைக்குள் போய்கொண்டிருக்கின்றோம் என்பதையே உணர்த்துகின்றன.
முழுமையாக ஒரு இராணுவ மயப்படுத்தப்பட்ட இராணுவ பிரசன்னத்திற்குள் வாழ்கின்ற சூழலில் எங்களை நோக்கி நகர்ந்துகொண் செல்கின்றது. இந்த சூழலில் தான் எங்கள் பணிகளை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை