கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1967 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 12 பேர் பூரண குணமடைந்து இன்று (புதன்கிழமை) வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர் என அந்த பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
இவர்களில் 04 கடற்படையினரும் உள்ளடங்குவதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதன்படி, கொரோனா தொற்றிலிருந்து இதுவரையில், 892 கடற்படையினர் பூரணமாக குணமடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2081 ஆக பதிவாகியுள்ளது.
அவர்களில் 1967 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திருப்பியுள்ள நிலையில், 103பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும் இந்த தொற்றுக்கு உள்ளானவர்களில் 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை