இரத்தினபுரி தெனவக கங்கையில் இருந்து இரு சடலங்கள் கண்டெடுப்பு

இரத்தினபுரி – பெல்மடுல்ல- கனேகம பிரதேசத்தில் தெனவக கங்கையில் இருந்து இரு சடலங்களை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

குறித்த இரண்டு சடலங்களும் மிதந்துக்கொண்டிருந்த நிலையில், இன்று (புதன்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆண்கள் இருவரின் சடலங்களே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறித்த சடலங்களில் ஒரு சடலத்தின் கழுத்துப் பகுதியில் வெட்டுக் காயம் காணப்படுவதாகவும் மற்றைய சடலத்தின் தலைப்பகுதியில் காயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், சடலங்கள் தொடர்பாக பெல்மடுல்ல நீதவானால் பரிசோதனைகள் இடம்பெறவுள்ள நிலையில், பெல்மடுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.