ரூபெல்லா நோயைக் கட்டுப்படுத்திய முதல் 2 நாடுகளில் இலங்கை!

உலக சுகாதார அமைப்பின் வடகிழக்கு ஆசிய பிராந்திய நாடுகளில் ரூபெல்லா மற்றும் அம்மை நோயை ஒழித்த முதல் இரண்டு நாடுகளாக இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகள் பெயரிடப்பட்டுள்ளன.

மூன்று வருடங்களினுள் ரூபெல்லா அல்லது அம்மை நோயாளர் ஒருவரேனும் இனங்காணப்படாவிட்டால் குறித்த நாடு குறித்த நோய்கள் இரண்டையும் ஒழித்த நாடாக உலக சுகாதார அமைப்பால் பிரகடனப்படுத்தப்படும்.

மாலைத்தீவில் இறுதியாக கடந்த 2009 ஆம் ஆண்டு அம்மை நோயாளர் ஒருவர் பதிவாகியிருந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ரூபெல்லா நோயாளர் ஒருவர் பதிவாகியிருந்தார்.

இதேவேளை, இலங்கையினுள் கடந்த 2016 ஆம் ஆண்டு இறுதியான அம்மை நோயாளர் பதிவான நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூபெல்லா நோயாளர் ஒருவர் இனங்காணப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.