மதகுருமார், அடிப்படைவாதிகளைக் கொண்டு அரசியலமைப்பு தயாரித்த நாடுகளின் கதியை மறக்கக்கூடாது- மங்கள எச்சரிக்கை!
மதகுருமார்கள், அடிப்படைவாதிகள், தீவிரவாதிகளை இணைத்து அரசியலமைப்பினைத் தயாரித்த நாடுகளுக்கு நேர்ந்த கதியை மறந்துவிட்டு செயற்படக் கூடாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்வரும் ஓகஸ்ற் 5ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இதுகுறித்து தனது ருவிற்றர் பதிவில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டு அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை மாற்றியமைக்கப் போவதாக ஆளும் தரப்பினர் கூறிவரும் சூழலிலேயே மங்கள சமரவீர இந்த விடயத்தினை ஞாபகப்படுத்தியுள்ளார்.
அவர் கூறுகையில், “மதகுருமார்கள், தீவிரவாதிகள் மற்றும் அடிப்படைவாதிகளை இணைத்துக் கொண்டு அரசியலமைப்பைத் தயாரிப்பதில் ஈடுபட்ட நாடுகளுக்கு நடந்தது என்னவென்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.
இத்தகைய மோசமான முயற்சிகள் அனைத்தும் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டிருப்பதை உறுதிசெய்வது மட்டுமே அனைத்து இலங்கையர்களினதும் கடமையாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை