தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைக் கண்டு ராஜபக்சர்கள் அஞ்சுகிறார்கள்- சிறீதரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைக் கண்டு ராஜபக்சர்கள் அஞ்சுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

. புலோப்பளை மக்களுடனான சந்திப்பு இன்று நடைபெற்றது. குறித்த சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்

 அண்மையில் பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்தவரும்  மகிந்த ராஜபக்ச அவர்களின் சகோதரனான பசில் ராஜபக்ச தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று கூறியிருக்கிறார்.

அவரின் சகோதரன் மகிந்த ராஜபக்ச அவர்கள் ஜனாதிபதியாக இருந்த போது இரண்டு வரவு செலவு திட்டங்களிற்கு நாம் ஆதரவளித்து இருக்கிறோம். எங்கள் இனத்தின் நிரந்தர அரசியல் தீர்விற்காகவே நாம் ஆதரவளித்திருந்தோம். நாம் அவர்களோடு19 தடவைகள் நாங்கள் பேசியிருக்கிறோம்.19 தடவைகளும் பொய்களையும் பிரட்டுக்களையும் கூறினார்கள்  ஆனால் அவர்கள் எந்தவிதமான தீர்வுகளையும் தரவில்லை.13+ ஐ கொடுக்கப் போவதாக கூறி எம்மை ஏமாற்றியவர்கள் இப்போது 13 ம் இல்லை என்கிறார்கள்.

இப்போது வடக்கு மாகாணம் முழுவதும் புதிதாக இராணுவ சோதனை சாவடிகள் முளைத்திருக்கின்றன. இதனால் இந்த நாடு முழுவதும் ஒரு இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கிறது.

 இந்த விடயங்களை சிங்கள மக்கள் நன்கு புரிந்து விட்டார்கள் ராஜபக்சாகளின் இராணுவ ஆட்சியை நன்று  விளங்கிவிட்டார்கள் இவர்களின் உண்மை நிலைப்பாட்டை சில சிங்கள கட்சிகள் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள் தோற்று விடுவோமோ னிராகரிக்கப்பட்டு விடுவோமோ என்ற பீதி ராஜபக்சாக்களை ஆட்கொண்டுள்ளது நாட்டில் பல உயர்ந்த பொறுப்புக்களில் இராணுவத் தளபதிகள் அமர்த்த்ப்பட்டு உள்ளார்கள் தேர்தலின் பின் வடக்கு கிழக்கில் இரானுவத் தளபதிகளே நியமிக்கப்பட உள்ளனர் அதனை விட மாவட்ட அரசாங்க அதிபர்களும் இராணுவத் தளபதிகளை நியமித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை ஆகவே கோட்டாபய ஒரு இரானுவ சிந்தனைகளில் மூழ்கி உள்ளார்

கோத்தாவும் மகிந்த ராஜபக்ச எதிர்பார்ப்பது போன்று இம்முறை அவர்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு கிடைக்காது என்பதை அறிந்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வசைபாடத் தொடங்கியிருக்கிறார்கள்.

தென்னிலங்கையில் இருந்து வாக்கிற்காக வரும் அரசியல் கட்சிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே விமர்சிக்கிறார்கள். இங்கு உள்ள தமிழ்க் கட்சிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே விமர்சிக்கிறார்கள். ஆயுத ரீதியாக தமிழர்களை தோற்கடித்த ராஜபக்சஅரசு தமிழர்களை அரசியல் ரீதியாகவும் தோற்கடிக்க முயல்கிறது என மேலும் அவர் தெரிவித்தார்

குறித்த சந்திப்பில் முன்னாள் வடக்கு மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் குருகுலராஜா பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுரேன் உபதவிசாளர் கயன் பிரதேச சபையின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.