கட்டுநாயக்க விமான நிலையத்தில் திறக்கப்பட்டது கொரோனா பரிசோதனை கூடம்!

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகைதரும் பயணிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளும் பொருட்டு பரிசோதனைக் கூடம் ஒன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ஆய்வகம் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் இன்று (வியாழக்கிழமை) திறந்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடையும் பயணிகளுக்கு, இலவசமாக பி.சி.ஆர். பரிசோதனையை மேற்கொள்ளல் மற்றும் அதன் முடிவு அறிக்கையினை வெளியிடுதல் போன்ற நடவடிக்கைகள் குறித்த ஆய்வகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த ஆய்வகத்தில் ஒரேநாளில் 500 பயணிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.