எமது பேரம்பேசுகின்ற சக்திக்கு அமைச்சுப் பதவி தடையாகும்! இளைஞர்களின் கேள்விகளுக்கு செம்பியன்பற்றில் சுமந்திரன்
சென்ற தடவை நாங்கள் இருந்த அரசைக் கவிழ்த்து , 2015இல் புதிய அரசொன்றை அமைத்தபோது நாம் உறுதுணையாக இருந்தோம். இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கான சந்தர்ப்பமிருந்ததால் அரசை ஆதரித்தோம். அந்தத்தேர்தலின்போதும் அமைச்சுப் பதவி எடுப்பது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. அமைச்சரவையில் சேர வேண்டுமெனச் சொல்லப்படவில்லை. சேருவீர்களா எனக்கேட்கப்பட்டது. நாங்கள் சேரவில்லை . ஏனெனில் அரசியல் தீர்வொன்றைப் பேச்சின் மூலம் பெறுவதற்கு, எமது பேரம் பேசும் சக்திக்கு இது தடையாக இருந்துவிடும் என்பதால் நாம் அமைச்சரவையில் சேரவில்லை . அரசில் இணைந்தால் கூட்டுப்பொறுப்பு உள்ளது. அரசின் எல்லா முடிவிற்கும் நாமும் பொறுப்பாளிகள்.
- இவ்வாறுதெரிவித்திருக்கின்றார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன்.
வடமராட்சி, செம்பியன்பற்றில் நேற்றுக் காலை நடந்ததேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் –
அபிவிருத்திக்காக நாங்கள் செயற்படவேண்டுமென்பதற்குமுற்றுமுழுதாக நான் இணங்குகிறேன். அரசியல் தீர்வொன்று எப்பொழுது வருமெனச் சொல்ல முடியாது. ஜனநாயகச் சூழலில் காத்திருந்து பேச்சு மூலம்தான் பெற முடியும். போர்ச்சூழல் என்றால் அடித்துப் பறிக்கலாம். இது அப்படியல்ல. அதற்கு எவ்வளவு காலம் எடுக்குமெனச்சொல்லமுடியாது. அந்த இடைப்பட்ட காலத்தில் நாங்கள் எமது பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்வது அத்தியாவசிய தேவை. புதிய ஆட்சியில் அமைச்சரவையில் சேர்வதாக இருந்தாலும் எந்த அமைச்சுக்கள், எத்தனை அமைச்சுக்கள், என்னவிதமான அதிகாரங்கள் என்பவற்றைப் பேரம் பேச எமக்கு பலம் இருக்கவேண்டும்.
அரசுடன் இணைவதா, இல்லையா என்ற தீர்மானம் பின்னர் எடுக்கப்படுவதாக இருந்தாலும், ஏற்கனவே சில தீர்மானங்களை எடுத்து நடைமுறைப்ப டுத்துகின்றோம்.
வடக்கு-கிழக்குக்கான மாற்றுப்பொருளாதார நிறுவனமொன்றை ஏற்படுத்தும் முன்னெடுப்புக்கள் செய்யப்பட்டுள்ளன. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் உதவியுடன் நமது பாரம்பரிய வாழ்வாதார தொழில்களை நவீனப்படுத்தும் ஒரு முறையையும், புதிதாக தொழில்நுட்பரீதியில் நவீன உலகில் வேலைவாய்ப்புக்களை அதிகரிப்பது, உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்களையும் வகுக்க வேண்டும்.
காங்கேசன்துறைசிமெந்துத்தொழிற் சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற் சாலை, வாழைச்சேனை காகித தொழிற் சாலை என்பன ஜீ.ஜீ.பொன்னம்பலம் அமைச்சராகப் பதவி வகித்த காலப்பகுதியில் அமைக்கப்பட்டன. பின்னர் அவர் அமைச்சுப் பதவியை துறந்தபோது, பெரும்பான்மை இனத்தவருடன் இணங்கிச்செயற்படுவதில் நம்பி இறங்கியமை தவறென்பது எனக்குத் தெரிகிறது, அதனால் நான் அமைச்சுப் பதவியிலிருந்து விலகுகிறேன் என அறிவித்தார்.
1952ஆம் ஆண்டு தேர்தலில் அவரது கட்சி முதன்மைக் கட்சியாக வெற்றிபெற்றது. தமிழ் அரசுக்கட்சிக்கு 2ஆசனங்கள் தான் கிடைத்தன. ஆனால் அதற்கு பிறகு நடந்த எல்லாத் தேர்தல்களிலும் தமிழ் அரசுக் கட்சி முதன்மையான இடத்தைப் பெற்றது. |
ஆட்சியதிகாரம் பிரதேசவாரியாக, சமஷ்டி கட்டமைப்பின்கீழ்பகிரப்பட வேண்டுமென எமது கட்சி சொல்லி வருகிறது. 1956ஆம் ஆண்டியிலிருந்து மக்களின் ஆதரவு அதற்கு இருந்து வருகிறது. இன்றுவரைசமஷ்டி என்ற ஆட்சிமுறைக்குக் குறைவாக எமது மக்கள் வாக்களித்தவர்கள் அல்லர். . ஒருமுறை தனிநாட்டுக்கும் வாக்களித்தனர்.
எங்கள் மக்களின் எதிர்பார்ப்பு – அர சியல் உரித்துக்களை நாம் பெறவேண் டும். எமது உரித்துக்களைப் பெற்றால் பொருளாதார விடயங்களை நாமே கையாளலாம் என்பதாகவே இருந்தது.
இந்தப் போக்கிலே ஒரு மாற்றம் ஏற்பட்டிருப்பதை காணமுடிகிறது. நான் போகும் கூட்டங்களில் இளைஞர்கள் நேரடியாக இந்தக் கேள்வியை என்னிடம் கேட்கிறார்கள்.
சென்ற தடவை நாங்கள் இருந்த அரசைக் கவிழ்த்து , 2015இல் புதிய அரசொன்றை அமைத்தபோது நாம் உறுதுணையாக இருந்தோம். இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கான சந்தர்ப்பமிருந்ததால் அரசை ஆதரித்தோம். அந்தத்தேர்தலின்போதும் இந்தக் கேள்வி எழுப்பப்பட்டது. அமைச்சரவையில் சேர வேண்டுமெனச் சொல்லப்படவில்லை. சேருவீர்களா எனக்கேட்கப்பட்டது. நாங் கள் சேரவில்லை . ஏனெனில் அரசியல் தீர்வொன்றைப் பேச்சின் மூலம் பெறுவதற்கு, எமது பேரம் பேசும் சக்திக்கு இது தடையாக இருந்துவிடும் என்பதால் நாம் அமைச்சரவையில் சேரவில்லை . அரசில் இணைந்தால் கூட்டுப்பொறுப்பு உள்ளது. அரசின் எல்லா முடிவிற்கும் நாமும் பொறுப்பாளிகள்.
தற்போது ஆட்சிராஜபக்ஷ குடும்பத் தின்கைக்கு சென்றுள்ளது. அவர்களின் அரசியல் அணுகுமுறைகள் எப்படியான தென் எல்லோருக்கும் தெரிகிறது. இந்த அரசில் ஒருகூட்டுப்பொறுப்புடன் அமை ச்சரவையில் இணையலாமா என்கிற கேள்வியுண்டு
என்னைப்பொறுத்தவரை கடந்த அரசில் அமைச்சரவைப் பொறுப்புக்களை ஏற் றிருந்தால், இன்னும் கூடுதலான நிதி களைப் பெற்றிருக்கலாம். அரசியல் தீர்வொன்று எற்படுவதில் உள்ள தாம தம், மக்களின் நாளாந்தவாழ்க்கையில் பாரிய தாக்கத்தை
ஏற்படுத்துகிறது. பொருளாதார ரீதி யாக நாம் வலுப்பட வேண்டும். இல்லா விட்டால் இன்னும் நலிவடைந்து விடு வோம்.
வளர்ச்சியை நாம் அடையாவிட்டால், வாழ்வாதாரம், வேலைவாய்ப்பில் லையென்றால் வெளிநாட்டுக்கு செல் வதையே இளைஞர்கள் ஒரேயொரு தெரிவாக வைத்துள்ளனர். அப்படி வெளிநாடு சென்றால் குடும்பங்கள், சமூகங்களின் வாழ்வாதாரம் ஓரளவு விருத்தியடையும். அதன் மூலம் எமது பொருளாதாரம் வெளிநாட்டிலிருந்து வரும் பணத்தின் மூலம், இப்பொழுது உள்ளதைப் போல ஓரளவு விருத்திய டையும். ஆனால் தீர்வென்பது இடம் பெறா மலே போய்விடும். எமது எண் ணிக்கையில் குறைவடைந்தால், தேசிய இனப்பிரச்சினை இருப்பதாகவே சொல்ல முடியாமல் போய்விடும்.
இந்த இரண்டுக்கும் இடையிலேயே நாம்இப்பொழுது சிக்கியுள்ளோம்.
இந்த அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான் மை தேவை. இதுவரை ஏற்படுத்தப்பட்ட எல்லாவிதஜனாநாயகச் சீர்திருத்தங்களையும் மாற்றுவதாகத் தெரிவித்துள்ளனர். அப்படியானசெயற் பாட்டுக்கு நாம் உடந்தையாக இருக்க முடியாது. சுயாதீன ஆணைக்குழுக்கள் கலைக்கப்பட்டு, முன்னர் இருந்ததை விட அதிகமான அதிகாரம் தனிநபரின் கைகளுக்குச் செல்லும். இது முழு நாட்டுக்கும் – குறிப்பாக தமிழ் மக்க ளுக்குக் கூடுதல் பாதகமாக இருக்கும்.
ஆகவே, அரசுக்கு ஆதரவு கொடுப் பதா- இல்லையா, சேர்வதா- இல்லையா என்ற தீர்மானங்கள் எடுக்கும்போது, அபிவிருத்தி என்கிற ஒரு விடயத்தை மையமாக வைத்து தீர்மானம் எடுக்க முடியாமல் உள்ளது. நாம் எல்லாவிடயங் களையும் ஆராய்ந்துதான் முடிவெடுப் போம்.
இந்த அரசுக்கு தேவை மூன்றில் இரண்டு பெரும்பான்மை. ஆனால் அவர் கள் அதைப் பெறமாட்டார்கள் என்பது தான் அரசியல் நோக்கர்களின் கணிப்பு. இப்படியான நிலைமையில் எங்களது ஆதரவு அவர்களுக்குத் தேவைப்பட
லாம்.
அது தேவைப்பட்டால் எந்த அடிப் படையில், நிபந்தனையில் அரசுடன் இணையலாமென்பது பற்றி நான் ஏற்கனவெசொல்லியுள்ளேன். அதைச் சொன்னதும் அரசதரப்பிலிருந்தும் நல்ல சமிக்ஞைகளை வெளியிட்டுள்ளனர். ஆனால் நான் அதைச் சொன்னகணமே தவறாக அர்த்தப்படுத்தப்பட்டு வெளிப் படுத்தப்படுகின்றது.
அரசமைப்பு சீர்திருத்தத்துக்காகவே மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்படுகின்றது. புதிய அரசமைப்பை உருவாக்கவதற்காக, புதிய அரசமைப்பு தேவையென முனைப்பாக வேண்டி நிற்பவர்கள் நாங்கள். அதனால், புதிய அரசமைப்பை நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்பம் வரும்போது, அதை நிறை வேற்றநாம் அரசுடன் பேச்சு நடத்தலாம். எமது அரசியல் அபிலாகைள் நிறை வேறும் பட்சத்தில் சிந்திப்போம் எனச் சொல்லியுள்ளேன்.
அது இப்பொழுதுநடக்குமா, நடக்காதா என்பதை இப்பொழுது சொல்ல முடி
யாது, தேர்தல் முடிய வேண்டும் முதலில், ஆசன எண்ணிக்கையை தெரிந்து கொள்ள வேண்டும். அதன் பின்னரும் ஒரு பேரம் பேசும் படலம் இருக்கும். அதில் என்ன முடிவெடுக்கப்படும் எனத் தற்போதைக்குச் சொல்ல முடியாது.
வெறுமனே நாங்கள் அரசில் இணைகிறோம், அமைச்சர் பதவியை ஏற்கிறோம் எனத்தீர்மானங்களை எடுக்க முடியாது. ஆனால், இதையெல்லாம் சொல்வதால், நாங்கள் ஒரு போதும் அதைச் செய்ய மாட்டோம் எனச் சொல்ல வில்லை. அதற்கான சந்தர்ப்ப சூழ்நிலை கள் சேர்ந்து வரவேண்டும்.
சென்ற ஆட்சிக்காலத்தில் நாம் அமைச் சரவையில் இல்லாவிட்டாலும், அமைச் சரவையில் இருந்தவர்களைவிட அதிக அபிவிருத்திகளைச் செய்ய முடிந்தது. சஜித் ஜனாதிபதித் தேர்தலில் தோல் வியடைந்தபின்னர், வடக்கு – கிழக்கில் அதிகமான நிதியை வழங்கியதாலேயே தெற்கு அவரை நிராகரித்ததாக சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.
அது உண்மை . வடக்குக்கு எவ்வளவு நிதி வந்ததென எமக்குத் தெரியும். ஆனால் தெற்கிற்குச் சென்ற நிதி பற்றி எமக்குத்தெரியாது. கடந்த அரசில் மிகப் பிரமாண்டமான அளவில் வடக்கு- கிழக் சூக்கு அதிக நிதி வந்தது உண்மை .
அபிவிருத்திக்காக நாங்கள் செயற்பட வேண்டுமென்பதை முற்றுமுழுதாக நான் இணங்குகிறேன். அரசில் தீர் வொன்று எப்பொழுது வருமெனச்சொல்ல முடியாது. ஜனநாயகச் சூழலில் காத்தி ருந்த பேச்சு மூலம்தான் பெற முடியும். போர்ச்சூழல் என்றால் அடித்துப் பறிக் கலாம். இது அப்படியல்ல. பேசி இணங் கப்பண்ணி எடுக்கின்ற முறை. ஆகவே அதற்கு எவ்வளவு காலம் எடுக்குமெனச் சொல்ல முடியாது. அந்த இடைப்பட்ட காலத்தில் நாங்கள் எமது பொருளாதா ரத்தை வளர்த்துக் கொள்வது அத்தி யாவசிய தேவை.
அரசுடன் இணைவதா, இல்லையா என்ற தீர்மானம் பின்னர் எடுக்கப்படுவ தாக இருந்தாலும், எற்கனவே சில தீர் மானங்களை எடுத்து நடைமுறைப் படுத்துகிறோம். வடக்கு – கிழக்கிற்கான மாற்றுப் பொருளாதார நிறுவனமொன்றை ஏற்படுத்தம் முன்னெடுப்புக்கள் செய்யப் பட்டுள்ளன. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் உதவியுடன் நமது பாரம் பரிய வாழ்வாதார தொழில்களை நவீ னப்படுத்தும் ஒருமுறையையும், புதிதாக தொழில்நுட்பரீதியில் நவீன உலகில் வேலைவாய்ப்புக்களை அதிகரிப்பது, உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங் களையும் வகுக்கவேண்டும்.
அரசின் உதவியை கூட எதிர்பார்க்கா மல் நாங்களாகவே ஒருபொருளாதாரத் திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம். தேர்தலின் பின்னர் அது இயங்கத் தொடங்கும். அதன் முழுமையான பிரதி பலனை பெறளிருவருடங்கள் ஆகும்.
இவையெல்லாம் சாத்தியமாக தேர் தல் முடிவுகள் முக்கியமானவை. அமைச் சரவையில் சேர்வதாக இருந்தாலும் எந்த அமைச்சுக்கள், எத்தனை அமைச்சுக் கள், என்னவிதமான அதிகாரங்கள் என்பவற்றைப் பேரம் பேச எமக்கு பலம் இருக்க வேண்டும். அல்லது வெளியே இருந்தாலும் கூட, இத்தனை எண்ணிக் கையான நாடாளுமன்ற உறுப்பினர் கள் உள்ளனர். அவர்களின் வாக்களிப்பு அரசுக்கு தேவையாக இருக்கும் போது அந்த பேரம் பேசலைச் செய்யலாம்.
எப்படியான பாத்திரத்தை நாங்கள் வகிக்கப்போகிறோம் என்பது இப்பொழுது தெரியாவிட்டாலும், எங்களுக்கு தெரிந்த ஒன்று, நாங்கள் பலமான ஓர் அணியாக நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும்என்றார்.
கருத்துக்களேதுமில்லை