ஒரேகொள்கையுடையவன் ஒன்றுபட்டு வாக்களிப்போம்! வெருகலில் சம்பந்தன்

சர்வதேச நாடுகளில் வழங்கப்பட்டள்ளது போன்ற ஒவ்வொரு மொழி பேசுகின்ற இனத்துக்கும் வழங்கப்பட்டுள்ள அதிகார பகிர்பு போன்ற ஒரு தீர்வை நாம் பெற வேண்டுமென்றால் அணைவரும் ஒன்றினைந்து தமது வாக்களித்து நாம் ஒரே கொள்கையில் இருக்கின்றோம் என்ற செய்தியை இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் மீண்டும் உணர்த்த வேண்டும்.என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நேற்றுமுன்தினம் மாலை த.மிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் வெருகல் பிரதேசத்தின் சூரநகர் விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்ற போதே அவர் இவ்வாறு பேசியிருந்தார்.
தொடர்ந்து அவர் உரை நிகழ்த்துகையில்
ஒற்றையாட்சி முறையானது  பல இனங்கள் இணைந்து வாழ்கின்ற நாட்டிற்கு உகந்த முறை அல்ல இந்த முறை மாற்றி அமைக்கப்பட்டு அதிகாரங்கள் பகிர்தளிக்கப்பட்டு அந்தந்த பிரதேசங்களில் வாழ்கின்ற மக்கள் தமது இறைமையின் அடிப்படையில் தம்மை தாமே ஆளுகின்ற வண்ணம் சட்ட திட்டங்கள் அமைய வேண்டும்.
தமிழ் மக்கள் அநீதியாக ஒன்றும் கேட்கவில்லை ஒருமித்த நாட்டுக்குள் ஜனநாயகத்தின் அடிப்படையில் எமது தீர்வினையே வலியுருத்தி வருகின்றோம். நாங்கள் நாட்டை பிரிக்க வேண்டும் என்று கேட்கவில்லை.
அன்றும்  பெரும்பான்மை இனத்தோடு ஒற்றுமையாக வாழ வேண்டும் எனறே எமது மக்கள் விருமபினார்கள் ஆனால் எல்லா விடயங்களிலும் நாம் திட்டமிட்டு பலவீனப்படுத்தப்பட்டோம். பொலிஸ், காணி, அபிவிருத்தி, கல்வி, தொழில் வாய்ப்பு போன்ற துறைகளில் அநீதி இழைக்கப்பட்டது எனவே தான் எமது அதிகாரத்தை எமது இறைமையின் அடிப்படையில் வழங்குமாறு வலியுருத்தி வருகின்றோம்.
நான் இந்த கூட்டத்திற்கு வருவதற்கு முன் சுவிஸ் நாட்டு தூதுவர் என்னுடன் தொடர்பு கொண்டார் எதிர் வருகின்ற 28ம் திகதி திருகோணமலை என்னை சந்திக்க விரும்புவதாக தெரிவித்தார். நான் அவரை வருமாறு அழைத்துள்ளேன்.
இதை ஏன் நான் செல்கின்றேன் என்றால் அதிகார பகிர்வுக்கு சுவிஸ் நாடு சிறந்த உதாரணமாகும் இந்த நாட்டில் பிரதானமாகா 3 மொழிகள் பேசுபவர்கள் உள்ளார்கள் ஜேர்மன்மொழி, பிரஞ்சுமொழி இத்தாலிமொழி ஆனால் அந்த மொழிகளுக்கு விரிவான அதிகார அலகுகள் உண்டு தங்களுடைய மக்களின் கருமங்களை தாங்களே கையாளுவார்கள் சுவிஸ் நாட்டில் தேசிய பொலிஸ படை இல்லை அந்த நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டுவது அந்த நாட்டின் அதிகாரிகள் சர்வதே நாடுகளில் இவ்வாறான அதிகாரப்பகிர்வுகள் பல நாடுகளில் மிகச் சிறப்பாக வழங்கபட்டுள்ளது.
உதாரணமாகா எமது அண்மையில் உள்ள மிகப்பெரிய நாடான இந்தியாவிலே உள்ள சகல மாநிலங்களுக்கும் மாநில சுயாட்சியும் அதிகாரப் பகிரவும் வழங்கப்ட்டுள்ளது. வௌ;வோறு மொழி வௌ;வோறு கலாச்சாரம் உள்ளவர்கள் தங்களை தாங்கள் ஆளுகின்ற அதிகார அலகு கிடைக்கப்பெற்றுள்ளது. இதைத்தான் எமது தமிழ் மக்களும் கோருகின்றனர்.
இவற்றை நாம் பெற வேண்டுமானால் நாம் தொடரந்து இந்த கோரிக்கையை வலியுருத்தி வருகின்றோம்.எம்மில் எந்த ஒரு தளர்வும் இல்லை என்பதை இலங்கை அரசிற்கும் சர்தேச சமூகத்திற்கும் உணர்த்த வேண்டும் எனவே ஒரு மித்து ஒற்றுமையாக ஒரே அணியில் அணைவரும் வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு நாம் வாக்களிப்போமானால் திருகோணமலையில் இரண்டு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை நாம் பெற முடியும் இது நடக்காத காரியம் இல்லை இரண்டு முறை திருகோணமலை மாவட்டத்தில்  த.தே.கூ 2 ஆசனங்களை பெற்றிருக்கின்றோம். எனவே சிந்தித்து வாக்களிங்கள்.
வெருகல் பிரதேசத்தினுடைய கல்லறிப்பு நீர்ப்பாசனத்தை அபிவிருத்தி செய்தால் இந்த பகுதியில் உள்ள 5000 ஏக்கர் விளை நிலங்களுக்கு தேவையான நீர் கிடைக்கும் இது ஒரு பாரிய திட்டம் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நாம் தொழினுட்ப அதிகாரிகளின் ஆலோசனையை பெற்றிருக்கின்றோம். இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவர் ச.குகதாசன் அவர்கள்; இது விடயமாக ஆர்வமாகா இருக்கிறார் இத்திட்டத்தை மிக விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.