ஜோர்தானில் சிக்கித் தவித்த இலங்கையர்கள் 285 பேர் நாடு திரும்பினர்
கொரொனா வைரஸ் பரவல் காரணமாக ஜோர்தானில் தங்கியிருந்த இலங்கையர்கள் 285 பேர் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
விசேட விமானம் மூலம் அவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.
இதனையடுத்து, விமான நிலையத்தில் வைத்து அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
அதனைத்தொடர்ந்து, பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் உள்ள ஹோட்டல்களில் அவர்களை தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்ததைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கை இன்று முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை