கொரோனா வைரஸ் தொற்று: ஹோமாகமயில் 7 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன

ஹோமாஹம பகுதியில் ஏழு குடும்பங்களை சேர்ந்த 30பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களில் வைத்தியர் மற்றும் மருத்துவ நிலையமொன்றின் உரிமையாளர் ஒருவரும் காணப்படுவதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

அதாவது கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தை சேர்ந்த இரு இராணுவத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஹோமாகவிலுள்ள குறித்த இராணுவத்தினரின் உறவினர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.